அண்ணாசாலையில் ஏ.டி.எம். மையத்தில் பேட்டரிகள் திருட்டு 2 வாலிபர்கள் கைது


அண்ணாசாலையில் ஏ.டி.எம். மையத்தில் பேட்டரிகள் திருட்டு 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 16 April 2017 3:00 AM IST (Updated: 16 April 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாசாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தில் 3 இன்வெர்ட்டர் பேட்டரிகளை திருடிய 2 வாலிபர்கள் கைது கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பல்லவன் நகரை சேர்ந்தவர் குட்டி(வயது 40). பிளம்பரான இவரிடம் கடந்த 11–ந்தேதி, கத்தியை காட்டி மிரட்டி 2 பேர் ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்தனர். இதுகுறித்து குட்டி சென்னை அண்ணாசாலை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் அண்ணாசாலை போலீசார் பின்னி சாலை சந்திப்பில் நேற்றுமுன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 வாலிபர்களை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தபோது அதில் கத்தி இருந்தது. மேலும் இவர்கள் தான் குட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் ராயப்பேட்டை மிர்சா அலிகான் தெருவை சேர்ந்த பாரூக் ஷெரீப்(23), ஐஸ்அவுஸ் யானைகுளம் 2–வது தெருவை சேர்ந்த லத்தீப் உசேன்(23) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் அண்ணாசாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தில் 3 இன்வெர்ட்டர் பேட்டரிகளை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் வழிப்பறி மூலம் கொள்ளையடித்த 4.5 சவரன் தங்க நகைகள், பேட்டரிகள், ஒரு கைக்கடிகாரம் ஆகியவற்றையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story