மகளுடன் படம் பார்க்க சென்றபோது சினிமா தியேட்டரில் பெண் போலீசிடம் சில்மி‌ஷம் வாலிபர் கைது


மகளுடன் படம் பார்க்க சென்றபோது சினிமா தியேட்டரில் பெண் போலீசிடம் சில்மி‌ஷம் வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 April 2017 1:36 AM IST (Updated: 16 April 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் டவுனில் மகளுடன் படம் பார்க்க சென்றபோது சினிமா தியேட்டரில் ரெயில்வே பெண் போலீசிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஹாசன்,

ஹாசன் டவுனில் மகளுடன் படம் பார்க்க சென்றபோது சினிமா தியேட்டரில் ரெயில்வே பெண் போலீசிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ரெயில்வே பெண் போலீஸ்

ஹாசன் டவுன் ரெயில்வே குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகளுடன் ஹாசன் டவுனில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றார். மேலும் அங்கு அந்த பெண் தனது மகளுடன் அமர்ந்து சினிமா பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சினிமா பார்க்க வந்திருந்த ஒரு வாலிபர், அந்த பெண்ணின் அருகில் அமர்ந்து கொண்டு அவரிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

கைது

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த வாலிபரை அங்கேயே அடித்து, உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஹாசன் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் சிக்கமகளூரு டவுன் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பதும், அவர் சினிமா பார்க்கும் போது பெண் போலீசிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பிரதீப்பை ஹாசன் டவுன் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பார்க்க வந்த ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசிடம் வாலிபர் ஒருவர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story