தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிறிஸ்தவர்கள் புகார் மனு


தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிறிஸ்தவர்கள் புகார் மனு
x
தினத்தந்தி 16 April 2017 2:04 AM IST (Updated: 16 April 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்தவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.

காஞ்சீபுரம்,

திருக்கழுக்குன்றத்தை அடுத்த சோகண்டி பங்குதந்தை ஜேக்கப் மற்றும் கிறிஸ்தவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சந்தித்து மனு அளிக்க வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி கிராமத்தில் நேற்று முன்தினம் புனித வெள்ளி பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது. இதை நடத்தவிடாமல் போலீசாருடன் வந்து திருக்கழுக்குன்றம் தாசில்தார் மனோகரன் தடுத்தார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவுள்ள ஈஸ்டர் பண்டிகையை நடத்த உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

மேலும்  அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடமும் வழங்கினர்.

Next Story