கொடைக்கானல் தங்கும் விடுதிகளில் அறை கிடைக்காமல் சாலையோரத்தில் தூங்கிய சுற்றுலா பயணிகள்


கொடைக்கானல் தங்கும் விடுதிகளில் அறை கிடைக்காமல் சாலையோரத்தில் தூங்கிய சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 16 April 2017 4:45 AM IST (Updated: 16 April 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் தங்கும் விடுதிகளில் அறை கிடைக்காமல் சாலையோரத்தில் சுற்றுலா பயணிகள் தூங்கினர்.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ என வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான சீதோஷ்ண நிலை நிலவும். இதை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் கொடைக்கானலுக்கு வருகை தருவா£ர்கள். இந்தநிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதை தொடர்ந்து பலரும் குடும்பத்துடன் பொழுதை கழிக்க கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் சித்திரை பிறப்பு, வாரவிடுமுறை என தொடர்ந்து விடுமுறை என்பதால் பலரும் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். நேற்றும் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன், மோட்டார் சைக்கிளில் படையெடுத்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு போக்குவரத்து போலீசார் அதனை சரிசெய்தனர்.

சுற்றுலா பயணிகள் அவதி

ஆனால் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர். பிரையண்ட் பூங்கா, பில்லர்ராக், குணாகுகை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மேலும் குதிரைசவாரி, படகுசவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி சுற்றுலா தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததின் காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன. மேலும் வழக்கத்தை விட தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டினர். எனவே, பலரும் அறை கிடைக்காமல் சாலையோரத்தில் படுத்து உறங்கினர். மேலும் ஏரியை சுற்றியுள்ள இடங்களில் போர்வையை விரித்து படுத்திருந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.


Next Story