மொபட்டில் சென்று கொண்டிருந்த பள்ளி தலைமை ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு


மொபட்டில் சென்று கொண்டிருந்த பள்ளி தலைமை ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 16 April 2017 3:45 AM IST (Updated: 16 April 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே மகளுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்த பள்ளி தலைமை ஆசிரியையிடம் 9 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தரபெருமாள்கோவில் வடக்கு வீதியை சோ்ந்தவர் ரவி. இவா் கும்பகோணம் கோர்ட்டில் எழுத்தராக பணியாற்றி வருகிறாா். இவருடைய மனைவி மலா்விழி (வயது55). இவா் தேனாம்படுகை அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவா்களுக்கு தேன்மொழி என்ற மகள் உள்ளாா். சம்பவத்தன்று மலர்விழி மொபட்டில் தனது மகள் தேன்மொழியுடன், கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் அம்மாப்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். தேன்மொழி மொபட்டை ஓட்டிச் சென்றார். இவர்களுடன் ரவி வேறு ஒரு மொபட்டில் தனியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் மலர்விழி, தேன்மொழி ஆகியோர் சென்ற மொபட்டை பின் தொடர்ந்து வந்தது. அதில் இருந்த 2 மர்ம நபர்கள், மலர்விழியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

வலைவீச்சு

இதுகுறித்து ரவி கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆகும்.


Next Story