விவசாயிகள் போராட்டத்தில் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய இளைஞர்கள் தாக்கப்பட்டதால் பரபரப்பு


விவசாயிகள் போராட்டத்தில் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய இளைஞர்கள் தாக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் போராட்டத்தில் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய இளைஞர்கள் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஒற்றை தீர்ப்பாய மசோதாவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை 19-வது நாளாக நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள், பல்வேறு கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.

நேற்று தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சியினரும், அமைப் பினரும் போராட்டத்தில் பங்கேற்று பேசி கொண்டிருந்தனர். அப்போது கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த கூடிபிரியேல் இயக்கத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென அரசியல்கட்சிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். போராட்டத்தில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சியினர் வெளியேற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர்.

தாக்குதல்

மீத்தேன் திட்டம் கொண்டு வர காரணமான தி.மு.க.வினரை எப்படி அழைக்கலாம். காவிரி உரிமையை நாம் இழப்பதற்கு காரணமே தி.மு.க. தான் என்று இளைஞர்கள் குற்றம்சாட்டினர். இதனால் அவர் களுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீரென சிலர், இளைஞர்களை விரட்டி சென்று தாக்கினர். இதனால் அவர்கள் சிதறி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் வந்து தி.மு.க.வினரை கட்டுப் படுத்தி அழைத்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து இளைஞர்களை அப்புறப்படுத்தினர். அரசியல் இல்லாத போராட்டம் என்று அறிவித்ததால் தான் நாங்கள் பங்கேற்றோம். ஆனால் இன்றைக்கு இந்த போராட்டத்தை அரசியலாக்கிவிட்டதால் எதிர்ப்பு தெரிவித்தோம். அதற்கு இளைஞர்கள் 3 பேரை தாக்கிவிட்டனர். இதில் அவர்கள் காயம் அடைந்துள்ளனர் என்று கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆவேசமாக பேசினார். இந்த சம்பவத்தால் தஞ்சை-திருச்சி சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story