டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருவாரூரில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் பஸ் நிலையம் அருகில் திராவிட விவசாய தொழிலாளர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். தி.க. மண்டல தலைவர் கோபால், மண்டல செயலாளர் முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.க. பொதுச்செயலாளர் ஜெயக்குமார், தலைமை பேச்சாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் முன்னாள் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் கணபதி, மாவட்ட தலைவர்கள் சுரேஷ் (திருவாரூர்), முருகையன் (திருத்துறைப்பூண்டி), மாவட்ட துணைத்தலைவர் அருண்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் மனோகரன் நன்றி கூறினார்.

Next Story