கோட்டூரில் புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்


கோட்டூரில் புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 16 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூரில் புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் மாணவிகள் விடுதி, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்சி மையம் உள்ளிட்டவை அமைந்துள்ள பகுதியில் புதிய மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் வீராசன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவசண்முகம், கட்சி நிர்வாகிகள் சேகர், வள்ளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைக்க கூடாது

கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜகோபால், இளைஞர் பெருமன்ற நிர்வாகி நாகசுப்பிரமணியன் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர். இதில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் வகையில் கோட்டூரில் மதுக்கடை அமைக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது. 

Next Story