மண் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்


மண் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 April 2017 4:00 AM IST (Updated: 16 April 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

மண் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்

நச்சலூர்,

நச்சலூர் அருகே நங்கவரம் பேரூராட்சியில் உள்ள பாதியக்காவல்காடு பகுதியில் சிலர் மண் கடத்துவதாக அப்பகுதி பொதுமக்கள், குளித்தலை கோட்டாட்சியர் சக்திவேலுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கோட்டாட்சியர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தார். அப்போது மண் கடத்துவது தெரிந்தது. இதையடுத்து மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிப்பர் லாரிகள், ஒரு பொக்ளின் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story