திருப்போரூர் அருகே மதுக்கடை கட்டிடம் இடிப்பு வழக்கில் 2 பேர் கைது
திருப்போரூர் அருகே மதுக்கடை கட்டிடம் இடிப்பு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் சாலை, ஏரிக்கரை அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதிய மதுக்கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மதுக்கடை கட்டிடத்தை கடந்த 13–ந் தேதி பொதுமக்கள் இடித்து தள்ளினர். பட்டா நிலத்தில் இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டதாக திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கர் (வயது 42) ராமச்சந்திரன் செட்டியார் (70) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆலத்தூர் பகுதி மக்கள் நேற்று திருப்போரூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்சுக்கு வழி விட்டு மறுபடியும் மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், தாசில்தார் விமல்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் அவர்கள் திருப்போரூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் திருப்போரூர் போலீசார் ஜெய்சங்கர் மற்றும் ராமச்சந்திரன் செட்டியாரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சிக்குட்பட்ட ஆரம்பாக்கம் கூட்ரோடு துர்க்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள கட்டிடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் 300–க்கும் மேற்பட்டோர் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் பேசி கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story