நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மாடல் அழகி கற்பழிப்பு குறும்பட நடிகர் மீது வழக்குப்பதிவு
நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மாடல் அழகியை கற்பழித்த குறும்பட நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மாடல் அழகியை கற்பழித்த குறும்பட நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாடல் அழகிமும்பை சாந்தாகுருஸ் பகுதியை சேர்ந்தவர் 24 வயது மாடல் அழகி. இவருக்கு கடந்த 6 மாதம் முன்பு குறும்பட நடிகர் சுவராஜ் சிங் என்பவர் அறிமுகம் ஆனார். அவர் மாடல் அழகிக்கு பிரபல நட்சத்திரங்களுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதனை நம்பிய மாடல் அழகி அடிக்கடி நடிகர் சுவராஜ் சிங்கை தொடர்பு கொண்டு நடிக்க வாய்ப்பு வாங்கி தரும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் கடந்த 6–ந்தேதி தனது அலுவலகத்திற்கு வரும் படி சுவராஜ் சிங் மாடல் அழகிக்கு அழைப்பு விடுத்தார்.
போலீசில் புகார்அவரது அலுவலகத்திற்கு சென்ற மாடல் அழகிக்கு குளிர்பானம் கொடுத்து உள்ளார். அதை குடித்த மாடல் அழகி சுயநினைவை இழந்தார். அவர் கண் விழித்து பார்த்த போது தனது உடலில் ஆடை இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் தான் கற்பழிக்கப்பட்டு இருப்பதாக உணர்ந்த அவர் சம்பவம் குறித்து சாந்தாகுருஸ் போலீசாரிடம் நடிகர் சுவராஜ் சிங்கிற்கு எதிராக புகார் அளித்தார். இதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தனு பவார் குறும்பட நடிகர் சுவராஜ் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.