கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு முதல்–அமைச்சர் தகவல்


கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு முதல்–அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 16 April 2017 3:30 AM IST (Updated: 16 April 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி

புதுவை கம்பன் கலையரங்கத்தில் நேற்று தன்னார்வல அமைப்பு சார்பில் திருநங்கைகள் தின விழா நடந்தது. விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். விழாவில் கலந்து கொண்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

கல்வி, வேலைவாய்ப்பு

புதுவையில் பிறந்து வளர்ந்த திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயது பூர்த்தியானவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது. புதுவையில் உள்ள திருநங்கைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிடப்படும். அவர்கள் சுயமாக தொழில் தொடங்க அரசு சார்பில் பயிற்சிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சிவா, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் ஜெயந்தி குருமூர்த்தி, டாக்டர் விஜயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story