மும்பை – ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து; 3 பேர் பலி
மும்பை – ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
மும்பை,
மும்பை – ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
தடுப்பு சுவரில் மோதியதுகுஜராத்தை சேர்ந்த 4 பேர் நேற்று அதிகாலை மும்பையில் இருந்து குஜராத் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர். கார் அதிகாலை 3 மணியளவில் பால்கர் மாவட்டம் மும்பை – ஆமதாபாத் நெடுஞ்சாலை சரோதி நாக்கா அருகே சென்று கொண்டு இருந்தது.
அப்போது அங்குள்ள ஒரு சாலை வளைவில் கார் கட்டுபாட்டை இழந்து, அந்த பகுதியில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் படுகாயமடைந்து உயிருக்காக போராடினர்.
3 பேர் பலிவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காரில் இருந்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் 3 பேர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பால்கர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.