லஞ்ச வழக்கில் தானேயில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 2 பேர் கைது


லஞ்ச வழக்கில் தானேயில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 April 2017 3:35 AM IST (Updated: 16 April 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே,

தானேயில் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி


தானே பழங்குடியின மேம்பாட்டு துறை கூடுதல் கமிஷனராக பணிபுரிந்து வருபவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி மிலிந்த் கவாடே. 2008-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவை சேர்ந்த இவர், பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளி முதல்வர்கள் 12 பேரிடம், தலா ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

பணத்தை தரவில்லை என்றால், அவர்களை பதவியிறக்கம் செய்து விடுவதாக மிரட்டியதாகவும், இதற்கு துணை கமிஷனர் கிரண் மாலி (வயது 39) என்பவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது.

கைது

இதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், இந்த குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி மிலிந்த் கவாடே மற்றும் துணை கமிஷனர் கிரண் மாலி ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். மேலும், மிலிந்த் கவாடே அலுவலகத்தில் இருந்து லஞ்சப்பணம் ரூ.12 லட்சத்தை கைப்பற்றினர்.

லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story