உலகிலே பெரிய பறவை சிற்பம் ‘ஜடாயூ’
கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி மலைகளாக உள்ளன.
ராமாயண காலத்தில் சீதையை, ராவணன் கவர்ந்து கொண்டு புஷ்பக விமானத்தில் பறந்து சென்றபோது, சீதையின் கூக்குரல் கேட்டு ஜடாயூ என்ற பறவை அவரை காப்பாற்ற முயற்சிக்க, அதன் சிறகுகள் வெட்டப்பட்டு கீழே விழுந்ததாக புராண கதை உண்டு.
அந்த சம்பவம் நடந்ததாக கருதப்படும் பாறைப் பகுதி கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி மலைகளாக உள்ளன. அதன் நடுவில் இந்த ஜடாயூ பாறை அமைந்திருக்கிறது. அதில் ஜடாயூ சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. இது உலகத்திலே பெரிய பறவை சிற்பமாக கருதப்படுகிறது. கடல்பரப்பில் இருந்து 850 அடி உயரத்தில் இந்த ஜடாயூ சிற்பப் பாறை அமைந்திருக் கிறது.
“சீதையுடன் ராவணன் புஷ்பக விமானத்தில் பறந்தபோது, சீதை ‘காப்பாற்றுங்கள்’ என்று கத்தினார். அப்போது இந்த பாறையில் இருந்துதான் ஜடாயூ பறந்து சென்று ராவணனை தாக்கியது. அந்த பகுதி இப்போது ‘போரேடம்’ என்ற பெயரில் அறியப்படுகிறது.
ராவணன், ஜடாயூவை வீழ்த்த சந்திரஹாசத்தை பயன்படுத்தினான். அது சிவனை நோக்கி தவமிருந்து ராவணன் பெற்ற ஆயுதமாகும். அதன் மூலம் ஜடாயூவின் இடது சிறகு வீழ்த்தப்பட்டது. ஜடாயூ அப்போது தான் வசித்த இந்த பாறையிலே விழுந்திருக்கிறது.
சீதையை தேடிவந்த ராமபிரான் அந்த பறவையை பார்த்து, அதற்கு மோட்சம் வழங்கி யிருக்கிறார். ஜடாயூ வழிமறித்து தாக்கியதால்தான் ராவணன் தனது பயணத்தின் திசையை மாற்றி சபரிமலைக்கும் பின்பு ராமேஸ்வரம், தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு சென்றிருக்கிறார்” என்று விளக்கம் தருகிறார்கள்.
இந்த விளக்கம் ராஜீவ் அஞ்சல் என்ற சிற்பக் கலைஞரின் மனதைத் தொட்டது. ஆனாலும் அவர் கவனம் முழுவதும் சினிமா துறையை நோக்கியிருந்தது. புகழ் பெற்ற சினிமாக்களில் கலைப் பணிகள் செய்த அவரிடம், பின்பு கேரள அரசு சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக ஜடாயூ சிற்பத்தை உருவாக்கும் பணியை ஒப்படைத்தது. அவரும் அதை அற்புதமாக வடிவமைத்துள்ளார்.
250 அடி நீளம், 150 அடி அகலம், 75 அடி உயரத்துடன் இந்த சிற்பம் தனிச் சிறப்பு பெற்றிருக்கிறது. அதன் உள்ளே அரங்குபோல் அற்புதமாக வடிவமைத்துள்ளார்கள். ஜடாயூவின் கண்கள் வழியாக தூரத்து காட்சிகளை எல்லாம் தத்ரூபமாக ரசிக்கலாம். ரோப் கார் வழியாகவும், நடந்தும் இதனை அடையலாம். ஜடாயூ பாறை சிறந்த சுற்றுலாத்தலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

Next Story