காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் வனக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.5¾ லட்சம் கடன் உதவி ஜெயந்திபத்மநாபன் எம்.எல்.ஏ. வழங்கினார்


காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் வனக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.5¾ லட்சம் கடன் உதவி ஜெயந்திபத்மநாபன் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 10:16 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டை அடுத்த லட்சுமியம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த வனக்குழு உறுப்பினர்களுக்கு காடு வளர்ப்பு திட்டத்தின்

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டை அடுத்த லட்சுமியம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த வனக்குழு உறுப்பினர்களுக்கு காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் கடன் உதவி வழங்கும் முகாம் பேரணாம்பட்டு வனச்சரக அலுவலகத்தில் நடந்தது. முகாமுக்கு ஜெயந்திபத்மநாபன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, 58 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்தை வழங்கினார்.

முகாமில் வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் டி.பிரபாகரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சி.வி.வெங்கடேசன், நகர செயலாளர் எல்.சீனிவாசன், வனக்குழு தலைவர் பிரேமா மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.


Next Story