கண்ணமங்கலத்தில் காளைவிடும் திருவிழா
கண்ணமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது. இதில் கண்ணமங்கலம், சந்தவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. காளைகள் வீதியில் ஒன்றன் பின் ஒன்றாக ஓட விடப்பட்டன.
இதில் வேகமாக ஓடி முதலிடம் பிடித்த காளையின் உரிமையாளர் கே.வி.குப்பம் தினேஷ் என்பவருக்கு மோட்டார் சைக்கிளும், 2–ம் இடம் பிடித்த காளையின் உரிமையாளர் மகாதேவமலை காஞ்சானாவிற்கு மொபட்டும், 3–ம் இடம் பிடித்த காளையின் உரிமையாளர் ஜோலார்பேட்டை பசுபதிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 45 காளைகளின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிசுந்தரன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
ஏற்பாடுகளை கண்ணமங்கலம், கொங்கராம்பட்டு, புதுப்பேட்டை பொதுமக்கள் சார்பில் பெரிய தனம் தர்மகர்த்தா மற்றும் விழாக்குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.