ராமநாதபுரத்தில் பெரிய கண்மாய் நீர் பயன்படுத்தும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரத்தில் பெரிய கண்மாய் நீர் பயன்படுத்தும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 11:07 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவா பெரிய கண்மாய் நீரை பயன்படுத்தும் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ராமநாதபுரம்,

தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மற்றும் ராமநாதபுரம் பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியின் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய–மாநில அரசுகளை வலியுறுத்தியும் ராமநாதபுரம் அரண்மனை முன்பு விவசாயிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் காமாட்சி தலைமை தாங்கினார். முதுனாள் தியாகராஜன், தொருவளூர் நாகேசுவர லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணை தலைவர் பாலசுந்தரமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

கோ‌ஷம்

இதில் கூட்டுறவு மற்றும் அரசுடைமை வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன் முழுவதையும் ரத்து செய்யவேண்டும். பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும். வறட்சி நிவாரண தொகையை பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும்.

அனைத்து கண்மாய்கள் மற்றும் ஆறுகளை தூர்வார வேண்டும். நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது போன்ற கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story