குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது பா. ஜனதா வலியுறுத்தல்
பா. ஜனதா கட்சியின் சிவகாசி ஒன்றிய ஊழியர் கூட்டம் எரிச்சநத்தம் மாசாணி அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
திருத்தங்கல்,
பா. ஜனதா கட்சியின் சிவகாசி ஒன்றிய ஊழியர் கூட்டம் எரிச்சநத்தம் மாசாணி அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் தங்கராஜ், சிவகாசி ஒன்றிய தலைவர் சந்திரசேகரன், முன்னாள் ராணுவபிரிவு தலைவர் விஜயராகவன், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை மனதில் கொண்டு அதனை தவிர்க்க வேண்டும், விவசாயிகளின் பயிர் காப்பீடு நிவாரணம் விரைவில் வழங்கவேண்டும், எரிச்சநத்தம் பகுதியில் இருந்து சிவகாசிக்கு இரவு நேரங்களில் போதிய பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும், எரிச்சநத்தம் பஸ் நிறுத்தப்பகுதியில் பெண்களுக்கு சுகாதார வளாக வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி அடுத்த கட்ட வளர்ச்சி பணிகள் பற்றி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள். மாவட்ட விவசாய அணி செயலாளர் ரெங்கராஜா ஏற்பாடுகளை செய்திருந்தார்.