ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 April 2017 4:00 AM IST (Updated: 16 April 2017 11:33 PM IST)
t-max-icont-min-icon

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடினார்கள். அதன்படி கிருஷ்ணகிரியில் தூய அன்னை பாத்திமா திருத்தலத்தில் நேற்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

இந்த சிறப்பு திருப்பலியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வார்த்தை வழிபாடு புனித பைபிளில் இருந்து வாசிக்கப்பட்டன.

சிறப்பு பிரார்த்தனை

இதே போல கிருஷ்ணகிரி சி.எஸ்.ஐ. தேவாலயம், ஐ.இ.எல்.சி. தேவாலயம் மற்றும் ஓசூர் ஆர்.சி. சி.எஸ்.ஐ. தேவாலயங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story