மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு 10 நாட்களில் நேர்முகத் தேர்வு அமைச்சர் தங்கமணி பேட்டி


மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு 10 நாட்களில் நேர்முகத் தேர்வு அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 11:39 PM IST)
t-max-icont-min-icon

மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு இன்னும் 10 நாட்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்

நாமக்கல்,

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :–

தமிழகத்தில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு மாநில அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. சில இடங்களில் கூடுதல் நிதி ஒதுக்கி குடிநீர் பணிகளை நிறைவேற்றிட பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். அதன் அடிப்படையில் தேவைகளுக்கேற்ப கூடுதல் நிதியை அளித்து, குடிநீர் வழங்க மாநில அரசு தயாராக உள்ளது.

உதய் மின் திட்டத்தில் மின்சார நுகர்வு அளவை கணக்கிடும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தும் திட்டம் நாடு முழுவதும் வர இருக்கிறது. வழக்கம்போல் 2 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே மின்சார நுகர்வு கணக்கீடு செய்யப்படும். மாதம் ஒருமுறை கணக்கீடு என்ற திட்டம் தமிழ்நாட்டில் கிடையாது.

நேர்முகத் தேர்வு

மின்சார வாரியத்தில் சமீபத்தில் நேர்மையான, வெளிப்படையான முறையில் 305 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. அதேபோல தொழில்நுட்ப உதவியாளர், டிராப்ட்ஸ் மேன் ஆகிய பணியிடங்களும் நிரப்பப்படும். அவர்களுக்கு தற்போது மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளன. நேர்முகத் தேர்வு இன்னும் 10 நாட்களில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story