நாமக்கல் அருகே தீத்தடுப்பு செயல்முறை விளக்கம்


நாமக்கல் அருகே தீத்தடுப்பு செயல்முறை விளக்கம்
x
தினத்தந்தி 16 April 2017 11:40 PM IST (Updated: 16 April 2017 11:40 PM IST)
t-max-icont-min-icon

பணி நேரத்தில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14–ந் தேதி முதல் 20–ந் தேதி

நாமக்கல்,

பணி நேரத்தில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை தீத்தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி நாமக்கல் அருகே உள்ள கணவாய்ப்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் தீயணைப்பு மீட்புத்துறை மாவட்ட அலுவலர் அழகப்பன் தலைமை தாங்கினார்.

இதில் தீ விபத்திற்கான காரணம், தீ விபத்தை தடுக்க எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது போன்ற செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட உதவி அலுவலர் இளஞ்செழியன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு தீயணைப்பு நிலையத்தில் மலர்வளையம் வைத்து வீரஅஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story