அரசின் உதவித்தொகை பெற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


அரசின் உதவித்தொகை பெற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 April 2017 4:00 AM IST (Updated: 16 April 2017 11:44 PM IST)
t-max-icont-min-icon

அரசின் உதவித்தொகை பெற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தற்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதியை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவை, தொடர்ந்து புதுப்பித்து 31.3.17 அன்றைய நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.6.17 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை மே 31–ந் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story