அம்பேத்கர் விளம்பர பதாகையை கிழித்தவர்களை கைது செய்ய கோரி ராசாக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்


அம்பேத்கர் விளம்பர பதாகையை கிழித்தவர்களை கைது செய்ய கோரி ராசாக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 11:55 PM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் விளம்பர பதாகையை கிழித்தவர்களை கைது செய்ய கோரி, ராசாக்குப்பத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி அருகே ராசாக்குப்பத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விளம்பர பதாகை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இதை நேற்று முன்தினம் இரவு மர்ம மனிதர்கள் கிழித்து சேதப்படுத்தி விட்டனர்.

நேற்று காலை, இதை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கடலூர்–விருத்தாசலம் சாலையில் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவசக்தி தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் போது, விளம்பர பதாகையை கிழித்து சேதப்படுத்தியவர்களை போலீசார் கண்டறிந்து உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரி கோ‌ஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இது தொடர்பாக புகார் செய்யுங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்று அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story