வடஇந்தியாவில் பா.ஜனதா செய்யும் அரசியல் தந்திரம் கர்நாடகத்தில் எடுபடாது சித்தராமையா பேட்டி


வடஇந்தியாவில் பா.ஜனதா செய்யும் அரசியல் தந்திரம் கர்நாடகத்தில் எடுபடாது சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 17 April 2017 2:00 AM IST (Updated: 16 April 2017 11:58 PM IST)
t-max-icont-min-icon

வடஇந்தியாவில் பா.ஜனதா செய்யும் அரசியல் தந்திரம் கர்நாடகத்தில் எடுபடாது என்று சித்தராமையா கூறினார்.

புதுடெல்லி,

வடஇந்தியாவில் பா.ஜனதா செய்யும் அரசியல் தந்திரம் கர்நாடகத்தில் எடுபடாது என்று சித்தராமையா கூறினார்.

முதல்–மந்திரி சித்தராமையா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

கர்நாடகத்தில் எடுபடாது

கர்நாடகம் காங்கிரஸ் கட்சியின் இரும்பு கோட்டை. முன்னாள் முதல்–மந்திரி பங்காரப்பா பா.ஜனதாவில் சேர்ந்ததும், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சியில் ஒப்பந்தப்படி எடியூரப்பாவுக்கு ஆட்சியை குமாரசாமி வழங்காததாலும் இங்கு பா.ஜனதா சற்று பலம் அடைந்தது. தற்போது மாநிலத்தில் எங்கள் அரசுக்கு எதிராக எந்த அலையும் இல்லை. இது இடைத்தேர்தல் முடிவு மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. வட இந்தியாவில் பா.ஜனதா செய்யும் அரசியல் தந்திரம் கர்நாடகத்தில் எடுபடாது.

தற்போதைக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை. கர்நாடகத்தில் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.52 ஆயிரம் கோடி கடன் உள்ளது. கடன் தள்ளுபடி செய்ய மத்திய அரசு உதவ வேண்டும். கர்நாடகத்தில் வறட்சி நிவாரண பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் சமபங்கு, அனைவருக்கும் சம உரிமை என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

பிரதமர் அக்கறை காட்டவில்லை

மகதாயி நதி நீர் பிரச்சினையில் சுமுக தீர்வு காண பிரதமர் அக்கறை காட்டவில்லை. பிரதமர் கோவா, கர்நாடக, மராட்டிய மாநிலங்களின் முதல்–மந்திரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். பிரதமரை எனது தலைமையில் அனைத்துக்கட்சி குழு சந்தித்தபோது, இதுபற்றி பா.ஜனதாவினர் எதுவும் பேசவில்லை.

பிரதாப்சிம்ஹா எம்.பி.க்கு அரசியல் ஞானம் இல்லை. அவருக்கு இதில் அரைஞானம் தான் உள்ளது. கீதா மகாதேவ பிரசாத்தை அவர் அவமரியாதையாக பேசினார். இது சரியல்ல. கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலை நாங்கள் எதிர்கொள்வோம். நான் உள்பட உள்ளூர் தலைவர்களே அரசியல் தந்திரங்களை வகுத்து செயல்படுவோம். பிரசாந்த் கிஷோரை நாங்கள் பிரசார தந்திரத்திற்கு அழைக்க மாட்டோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story