புதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்


புதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

புதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

பொள்ளாச்சி

அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

8-வது ஊதிய குழுவின் அறிக்கையை அமல்படுத்தும் வரை கடந்த காலங்களில் இடைக்கால நிவாரணம் வழங்கியதை போன்று, தற்போது 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். நீண்டகால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் வருவாய் துறை உள்பட அனைத்து துறைகளிலும் 3 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளது. இதனால் மக்கள் சேவையை செய்ய முடியவில்லை. எனவே காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி 8 மண்டலங்களில் அடுத்த மாதம் 10-ந்தேதி பேரணி நடத்துவது, மேலும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் சிங்காரவடிவேல், துணை தலைவர்கள் பாலமுருகன், சிவக்குமார், செயலாளர் சண்முகம், பொருளாளர் கஜேந்திரன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story