பல்லடம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


பல்லடம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே உள்ள ராயர்பாளையம் இட்டேரிவீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர மகன் கார்த்திக் (21). தொழிலாளி.

பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள ராயர்பாளையம் இட்டேரிவீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர மகன் கார்த்திக் (21). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனை அவருடைய பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story