விருதுநகர் மார்க்கெட் நிலவரம்: கடலை எண்ணெய், கொண்டைக் கடலை விலை உயர்வு


விருதுநகர் மார்க்கெட் நிலவரம்: கடலை எண்ணெய், கொண்டைக் கடலை விலை உயர்வு
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய், கொண்டைக் கடலை ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ள நிலையில் பருப்பு வகைகளின் விலையில் மாற்றம் இல்லை.

விருதுநகர்,

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடைக்கு ரூ.7,500 முதல் ரூ.7,800 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.9,600 முதல் ரூ.9,900 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.7,200 முதல் ரூ.9,200 வரையிலும் விற்பனை ஆனது. துவரை 100 கிலோ மூடைக்கு ரூ.4,700 முதல் ரூ.5,200 வரையிலும், துவரம் பருப்பு ரூ.9,200 முதல் ரூ.10,200 வரையிலும் விற்பனை ஆனது. பாசிப் பயறு 100 கிலோ மூடைக்கு ரூ.6,900 முதல் ரூ.7,400 வரையிலும், பாசிபருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.8,500 முதல் ரூ.9,200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

மல்லி லயன் ரகம் 40 கிலோ மூடைக்கு ரூ.3,200 முதல் ரூ.3,300 வரை விற்பனை ஆனது. மல்லி நாடு ரகம் ரூ.3,200 முதல் ரூ.3,400 வரையிலும் விற்பனை ஆனது. வத்தல் குவிண்டாலுக்கு சம்பா ரகம் ரூ.10,900 முதல் ரூ.11,200 வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.9,300 முதல் ரூ.10,300 வரையிலும், முண்டு வத்தல் குவிண்டாலுக்கு ரூ.14,800 முதல் ரூ.15,200 வரையிலும் விலை சொல்லப்பட்டது.

எண்ணெய்

விருதுநகர் எண்ணெய் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் 15 கிலோவுக்கு ரூ.20 விலை உயர்ந்து ரூ.2,065 ஆகவும், தேங்காய் எண்ணெய் ரூ.1,605 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.1,350 ஆகவும் விற்பனை ஆனது. நிலக் கடலை பருப்பு 80 கிலோ மூடைக்கு ரூ.200 விலை உயர்ந்து ரூ.6,600 ஆகவும், கடலை புண்ணாக்கு 100 கிலோ மூடைக்கு ரூ.4,300 ஆகவும், எள் புண்ணாக்கு 65 கிலோ ரூ.1,820 ஆகவும் விற்பனை ஆனது. பாமாயில் 15 கிலோவுக்கு ரூ.895 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.2,890 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

சீனி

விருதுநகர் சீனி மார்க்கெட்டில் சீனி குவிண்டாலுக்கு ரூ.4,230 ஆகவும், கொண்டைக் கடலை குவிண்டாலுக்கு ரூ.500 விலை உயர்ந்து ரூ.7,000 ஆகவும், பொரிகடலை 55 கிலோவுக்கு ரூ.100 விலை உயர்ந்து ரூ.4,710 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.2,650 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.2,975 முதல் ரூ.3,800 வரையிலும், மசூர் பருப்பு ரூ.5,900 ஆகவும், ரவை 25 கிலோவுக்கு ரூ.1,042 ஆகவும், மைதா முதல் ரகம் 90 கிலோ ரூ.3,145 ஆகவும், 2-வது ரகம் ரூ.2,185 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டா 50 கிலோ ரூ.1,275 ஆகவும் விற்பனை ஆனது. கோதுமை தவிடு 35 கிலோ ரூ.730 ஆகவும் விற்பனையானது.

விருதுநகர் காபி மார்க்கெட்டில் காபி பிளாண்டேசன் பிபி ரகம் 50 கிலோ ரூ.13,250 ஆகவும், ஏ ரகம் ரூ.13,300 ஆகவும், சி ரகம் ரூ.10,750 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.7,850 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.7,300 ஆகவும் விற்பனை ஆனது. கடந்த வாரம் விற்பனை மந்தம் காரணமாக பருப்பு வகைகளின் விலைகளில் மாற்றம் எதுவும் இல்லாமல் நிலையாக இருந்தது.

Next Story