நஞ்சன்கூடு இடைதேர்தலில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சுற்றுபயணம் களளே கேசவமூர்த்தி தகவல்
நஞ்சன்கூடு இடைத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க அங்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருப்பதாக களழே கேசவமூர்த்தி எம்.எல்.ஏ தகவல் தெரிவித்து உள்ளார்.
மைசூரு,
நஞ்சன்கூடு இடைத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க அங்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருப்பதாக களழே கேசவமூர்த்தி எம்.எல்.ஏ தகவல் தெரிவித்து உள்ளார்.
முழு ஒத்துழைப்பால்நஞ்சன்கூடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற களழே கேசவமூர்த்தி எம்.எல்.ஏ நேற்று முன்தினம் தனது தொகுதிக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
எம்.எல்.ஏ.வாக வெற்றிப்பெற்ற மறுநாளே அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தது பெருமையாக உள்ளது. முதல்–மந்திரி சித்தராமையா, மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி மகாதேவப்பா, மறைந்த முன்னாள் மந்திரி பெங்கி மகாதேவின் குடும்பத்தார், எனது ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி மக்களின் முழு ஒத்துழைப்பால் தான் இந்த தேர்தலில் நான் வெற்றி பெற முடிந்தது.
இந்த தேர்தலில் எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தொகுதி முழுவதும் உள்ள 234 கிராமங்களுக்கும் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்த சுற்றுப்பயணத்திற்கு சித்தராமையாவிடம் அனுமதி கேட்டு உள்ளேன். அவர் அனுமதி வழங்கியதும் இந்த தொகுதியில் உள்ள மக்களை நேரில் சந்தித்து நன்றி கூற உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மிகப்பெரிய வெற்றிஇந்த நிருபர்களின் சந்திப்பின்போது களழே கேசவ மூர்த்தியுடன் துருவ நாரயணன் எம்.பி., உள்பட பலர் உடன் இருந்தனர். அப்போது துருவ நாரயணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்த தொகுதியில் நாங்கள் நினைத்தற்கும் அதிகமான மக்கள் காங்கிரசிற்கு வாக்களித்து, எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து உள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த தொகுதியில் நிலுவையில் உள்ள அனைத்து வளர்ச்சி பணிகளையும் களழே கேசவமூர்த்தி நிறைவேற்றி தருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.