புதுச்சேரி துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


புதுச்சேரி துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

புயல் எச்சரிக்கையை யொட்டி புதுவை துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

அந்தமான் அருகில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு மாருதா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று முன்தினம் புதுவை துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. புதுவை கடலில் நேற்று வழக்கத்தைவிட அலைகளின் சீற்றம் சற்று அதிகமாக இருந்தது. இருந்தபோதிலும் பகலில் வெயிலின் தாக்கம் நேற்று மாறாக அதிகமாக காணப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது.

மீன்கள் விலை அதிகம்


தற்போது புதுவையில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மீன் மார்க்கெட்டுகளில் சிறு படகுகள் மூலம் கடலுக்குச் சென்று பிடித்து வரப்பட்ட மீன்கள் விற்பனைக்கு வந்தன. மீன்களின் வரத்துக் குறைவாக இருந்ததால் அவற்றின் விலை அதிகமாக இருந்தது.

Next Story