உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியர் சிவன்கோவிலில் சித்திரை திருவிழா


உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியர் சிவன்கோவிலில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 17 April 2017 4:00 AM IST (Updated: 17 April 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியர் சிவன்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உப்பிடமங்கலம்,

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தில் உள்ள அடியார்க்கு எளியர் சிவன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி கடந்த 12, 13-ந் தேதி களில் சிவ பக்தி தலைப்புகளில் சமய சொற்பொழிவு நடைபெற்றது. 14-ந் தேதி காலை கொடி ஏற்றப் பட்டது.

நேற்று முன்தினம் காப்பு கட்டுதல், குத்துவிளக்கு பூஜை, பவுர்ணமி பூஜை, 1,008 தாமரை வழிபாடு ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை உப்பிடமங்கலம் வடக்கு கேட் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பலர் பால்குடம், தீர்த்தக்குடம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல ஊர்வலமாக அடியார்க்கு எளியர் சிவன் கோவிலுக்கு வந்தனர்.

திருக்கல்யாணம்

பின்னர் சிவனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிவனுக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

பின்னர் அம்பாளும், சிவனும் நந்தி வாகனத்தில் வைக்கப்பட்டு வீதிஉலா நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அடியார்க்கு எளியர் நற்பணி மன்றத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story