கரூரில் 108.3 டிகிரி வெயில் கொளுத்தியது பொதுமக்கள் வெளியே செல்லமுடியாமல் அவதி


கரூரில் 108.3 டிகிரி வெயில் கொளுத்தியது பொதுமக்கள் வெளியே செல்லமுடியாமல் அவதி
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நேற்று அதிக பட்சமாக 108.3 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள் ளாகினர்.

கரூர்,

தமிழகம் முழுவதும் கோடை வெயில் அதிக அளவு அடிக்கிறது. தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில் தான் தொடர்ந்து அதிக அளவு வெயில் பதிவாகி யுள்ளது. நேற்று காலை 7 மணிக்கே வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் காலையில் நடைபயிற்சிக்கு வந்தவர்கள் நடைபயிற்சியை பாதியில் முடித்துக்கொண்டு சென்றுவிட்டனர். ஒரு சிலர் சிறிது தூரம் நடக்கும்போதே குளித்தது போல் உடல் முழுவதும் வியர்வை கொட்டியது. அந்த அளவிற்கு காலையிலேயே வெயில் பொதுமக்களை வாட்டிவதைத்தது.

பொதுமக்கள் அவதி

நேற்று கரூரில் அதிக பட்சமாக 108.3 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் பலர் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.இதனால் பகலில் கரூர் நகரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெண்கள் ஒரு சிலர் குடையை பிடித்துக்கொண்டு வந்தனர். பலர் முகத்தோடு சேர்ந்து தலையை துணியால் மூடிக்கொண்டும், வாலிபர்கள் தலையில் கைக்குட்டையால் சுற்றிக்கொண்டும் சென்றனர். நேற்று அடித்த வெயிலால் கரூர் மாவட்ட மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். நேற்று முன்தினம் கரூரில் 109 டிகிரி வெயில் அடித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story