நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கரூர் பஸ் நிலையம் புற நகருக்கு மாற்றப்படுமா?
நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கரூர் பஸ் நிலையம் புற நகருக்கு மாற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கரூர்,
ஜவுளி உற்பத்தி தொழிலில் உலக அளவில் பெயர் பெற்ற நகரம் கரூர். 400-க்கும் மேற்பட்ட ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் கரூர் பகுதியில் உள்ளன. அதேபோன்று பஸ் கூண்டு கட்டும் நிறுவனம், கொசுவலை உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் கரூர் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் வேலைக்கு வருகின்றனர். இதனால் கரூர் பஸ் நிலையத்தில் எப்போது பார்த்தாலும் பயணிகள் கூட்டம் அலை மோதும்.
இந்த நிலையில் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள கடைகளின் முன்பு பலர் ஆக்கிரமித்து அதில் கடை வைத்துள்ளனர். இதனால் பல நேரங்களில் பஸ் நிலையத்தில் நிற்கக்கூட இடம் இல்லாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக காலையில் வேலைக்கு வரும் நேரங்களிலும், மாலை வேலை முடிந்து செல்லும் நேரங்களிலும் கரூர் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்கக்கூட இடம் இல்லாத அளவில் கூட்டம் இருக்கிறது.
புற நகருக்கு...
இதற்கு காரணம் கரூர் பஸ் நிலையம் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் அப்போதைய மக்கள் தொகை மற்றும் குறைந்த அளவு இருந்த பஸ்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் கட்டப்பட்டது. அப்போதைய கால கட்டத்திற்கு கரூர் பஸ் நிலையம் போதுமானதாக இருந்தது. தற்போது மற்ற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவு பஸ்கள், கரூர் வந்து செல்கின்றன. இதனால் எப்போது பார்த்தாலும், பஸ்கள் மற்றும் பயணிகளால் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போலும் கரூர் பஸ் நிலையத்தை புற நகருக்கு மாற்ற வேண்டும் என்று தொழில் அதிபர்கள், பயணிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
வேண்டுகோள்
இதைத்தொடர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு கரூர் திருமாநிலையூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான எந்த வித பணியும் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று தொழில் அதிபர்கள், பயணிகள் என அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story