கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் 25-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்
கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வருகிற 25-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறினார்.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். பொது செயலாளர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அதில் 12 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவதாக எங்களிடம் தமிழக அரசு உறுதியளித்தது. ஆனால் இது வரை இது குறித்து அரசாணை வெளியிடப்படவில்லை.
25-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்
இதற்கு முக்கிய காரணம் தமிழக நிதித்துறை செயலாளர்தான் என்று நாங்கள் கருதுகிறோம். இதனால் நாங்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளோம். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வருகிற 25-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 30 ஆயிரம் பணியாளர்கள் கலந்து கொள்வார்கள். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story