சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் குறித்து அட்வகேட் கமிஷனர் ஆய்வு

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவுப்படி, நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் மனுராஜ் நேற்றுமுன்தினம் பெரம்பலூருக்கு வந்தார். அவர், பெரம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே புறவழிச்சாலை, துறைமங்கலம் ஏரி, குன்னம் தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளாறுபகுதி, ஆலத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட இரூர்ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்த பரப்பளவு குறித்தும், தற்போது அவை எத்தனை ஏக்கருக்கு அகற்றப்பட்டுள்ளது என்பது குறித்தும் குறிப்பெடுத்துக்கொண்டார். இந்த ஆய்வறிக்கையை மதுரை ஐகோர்ட்டில் அவர் சமர்ப்பிப்பார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், தாசில்தார்கள் பால கிருஷ்ணன் (பெரம்பலூர்), சீனிவாசன் (ஆலத்தூர்) உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story