அரியலூர் மாவட்டத்தில் ஆய்வக உதவியாளர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு


அரியலூர் மாவட்டத்தில் ஆய்வக உதவியாளர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு
x
தினத்தந்தி 17 April 2017 3:30 AM IST (Updated: 17 April 2017 3:26 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் ஆய்வக உதவியாளர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு இன்று நடக்கிறது

தாமரைக்குளம்,


ஆய்வக உதவியாளர் பணிக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள 87 காலி பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டியல் தயார் செய்யப்பட்டு, 430 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் 384 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பக பதிவு மூப்பு, கூடுதல் கல்வி தகுதி மற்றும் முன் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், தகுதி பெற்றவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் போது வழங்கப்பட்ட மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி பட்டியல் (மெரிட்) தயார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி மற்றும் இதர உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 87 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த பட்டியல் அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த 14-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு பட்டியல் அரியலூர் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் அவர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

Next Story