அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது


அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது
x
தினத்தந்தி 17 April 2017 3:45 AM IST (Updated: 17 April 2017 3:26 AM IST)
t-max-icont-min-icon

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த ராமசாமியின் மகன்கள் சின்னதுரை(வயது 50), செல்வகுமார்(47). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வகுமார், சின்னதுரையின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது செல்வகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் சின்னதுரையை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சின்னதுரை சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சின்னதுரையின் உறவினர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார். பின்னர் அவரை போலீசார் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story