டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அரும்பாவூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரும்பாவூர்,

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி சோலைராமசாமி தலைமை தாங்கினார். உழவர் மன்ற தலைவர் வரதராஜன், ஜெகநாதன், விஜயன் ஆகியோர் பேசினர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விசுவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்

ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு, கிடப்பில் போடப்பட்ட மலையாளப்பட்டி சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி நிவாரணத்தை பாரபட்சமின்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அரும்பாவூர் சுற்று வட்டார ஏரிகளை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷமிட்டனர். முன்னதாக அரும்பாவூர் சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு அரும்பாவூர் ரோடு, பேரூராட்சி சாலை, கடைவீதி வழியாக முக்கிய வீதிகளில் விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர். 

Next Story