கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாள்விழா


கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாள்விழா
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர், அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் நேற்று சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி– எட்டயபுரம் சாலை புதுரோடு சந்திப்பு பகுதியில் உள்ள அவருடைய உருவ சிலை முன்பு, சிலை பராமரிப்பு குழுவின் தலைவர் மாரியப்பன், திட்டங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன்னுசாமி ஆகியோர், பொங்கல் வைத்தனர். பின்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசியல் கட்சியினர் மரியாதை


தொடர்ந்து அ.தி.மு.க. (அம்மா) நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் தலைமையிலும், அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையிலும், தி.மு.க. சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையிலும், ம.தி.ம.க. சார்பில் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையிலும், வீர தமிழர் கட்சி சார்பில் மாநில தலைவர் வக்கீல் தேன்மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையிலும் அந்தந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரர் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

வட்டார காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் ரமேஷ் மூர்த்தி தலைமையிலும், புதிய தமிழகம் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் அன்புராஜ் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர செயலாளர் முருகன் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி மாவட்ட பொருளாளர் தியாகராஜன் தலைமையிலும் அந்தந்த கட்சியினர் வீரர் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வக்கீல் பாரத்குமார் தலைமையிலும், தமிழர் தாயகம் கட்சி சார்பில் தலைவர் செந்தில் மள்ளர் தலைமையிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் ரவிகுமார், மாவட்ட தலைவர் தங்க திருப்பதி தலைமையிலும் வீரர் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.


Next Story