மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் குதிரை வாகனத்தில் உற்சவர் வீதி உலா


மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் குதிரை வாகனத்தில் உற்சவர் வீதி உலா
x
தினத்தந்தி 17 April 2017 4:00 AM IST (Updated: 17 April 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் குதிரை வாகனத்தில் உற்சவர் வீதி உலா

தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் 7–வது தலமான தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 9–ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. விழாவில் 5–ம் திருநாளன்று இரவு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை 6 மணிக்கு உற்சவர் நிகரில் முகில் வண்ணன் குதிரை வாகனத்தில் புறையூரில் உள்ள ஆணையப்ப பிள்ளை சத்திரத்திற்கு புறப்பாடு நடந்தது. அங்கு பக்தர்கள் உற்சவருக்கு மாலை சாத்தி மரியாதை செலுத்தினர். இரவு ரத வீதிகளில் உற்சவர் நிகரில் முகில் வண்ணன் உலா வருதல் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று தேரோட்டம் நடக்கிறது. 10–ம் திருநாளான நாளை தீர்த்தவாரியுடன் திருவிழா முடிவடைகிறது.

Next Story