நெல்லையில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்


நெல்லையில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 17 April 2017 4:00 AM IST (Updated: 17 April 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்

நெல்லை,

வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே பந்தல் அமைக்கப்பட்டு வீரன் சுந்தரலிங்கம் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து 5 பெண்களுக்கு தையல் எந்திரங்கள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் துரைப்பாண்டியன், முத்துப்பாண்டியன், நெல்சன், பரத், செல்வம், யாலேஸ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு தலைமையில் சுந்தரலிங்கம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் செல்வானந்தம், செயலாளர் தமிழ் மகன் மாலிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் முத்துவளவன் தலைமையில் சுந்தரலிங்கம் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அவருடன் கட்சி நிர்வாகிகள் உதயகுமார், எம்.சி.சேகர், சாமுவேல் உள்பட பலர் வந்து இருந்தனர்.


Next Story