மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 April 2017 3:45 AM IST (Updated: 17 April 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

செருவாவிடுதி அருகே போத்தியம்பாள் நகரில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

திருச்சிற்றம்பலம்,

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி செருவாவிடுதி கடைவீதியில் செயல்பட்டு வந்த மதுக்கடை மூடப்பட்டது. இதனால் இந்த கடையை, செருவாவிடுதி அருகே உள்ள போத்தியம்பாள் நகரில் திறக்க அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் பஸ்நிறுத்தம் உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் மதுக்கடையை திறந்தால் அனைவரும் பாதிக்கப்படுவர். எனவே போத்தியம்பாள் நகரில் மதுக்கடையை திறக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார், கலால் தாசில்தார் புண்ணியமூர்த்தி, திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், செருவாவிடுதி கிராம நிர்வாக அலுவலர் துரைராசு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story