கோவில் திருவிழாவில் விவசாயியை தாக்கிய 3 பேர் கைது
கோவில் திருவிழாவில் விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் ராமர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின்போது தில்லைவிளாகம் கீழக்கரையை சேர்ந்த விவசாயி சச்சிதானந்தம் (வயது 41) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (27), பிரபாகரன் (28), பாலசுந்தரம் (23) ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த விஜயகுமார் பாட்டிலால் சச்சிதானந்தத்தின் வயிற்றில் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த சச்சிதானந்தம், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சச்சிதானந்தம் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
கைது
அதன்பேரில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சச்சிதானந்தத்தை தாக்கிய விஜயகுமார், பிரபாகரன், பாலசுந்தரம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story