சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் உடல் தகனம்
தஞ்சையில் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் உடல் தகனம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அ.தி.மு.க.(அம்மா) பொதுச் செயலாளருமான சசிகலாவின் அண்ணன் வினோதகன் மகன் டி.வி.மகாதேவன் (வயது47). இவர் தஞ்சை அருளானந்தநகரில் வசித்து வந்தார்.
நேற்றுமுன்தினம் காலை திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். மகாதேவன் உடல் தஞ்சை அருளானந்தநகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், அரசுத்துறை அதிகாரிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்
நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதன், திருவையாறு தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.ஆர்.மூப்பனார், பட்டுக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கராஜன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், நாகை தொகுதி எம்.எல்.ஏ. தமிமுன்அன்சாரி, நடிகர்கள் சரவணன், செந்தில் மற்றும் பல்வேறு அமைப்பினர் மகாதேவன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனத்தில் மகாதேவன் உடல் ஏற்றப்பட்டு தஞ்சை விளார்ரோடு அன்புநகரில் உள்ள மாரிகுளம் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஊர்வலத்தில் அ.தி.மு.க.(அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், புதிய பார்வை ஆசிரியர் ம.நட ராசன், சசிகலாவின் தம்பி திவாகரன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், துரைக் கண்ணு, எம்.பி.க்கள் நவநீத கிருஷ்ணன், வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன், கோபால், ரெங்கசாமி எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றது. மகாதேவனின் தம்பி தங்கமணி இறுதி சடங்கினை செய்தார். இதைத்தொடர்ந்து மகாதேவன் உடல் தகனம் செய்யப்பட்டது.

Next Story