டி.என்.பாளையம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை
டி.என்.பாளையம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 6 டாஸ்மாமக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்டமாக் கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த 5 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தில் மட்டும் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
முற்றுகை
இதனால் பங்களாப்புதூர், டி.என்.பாளையம், வாணிப்புத்தூர், நால்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் கொங்கர்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து மது வாங்கி குடித்து செல்கிறார்கள். இதனால் கடையின் முன்பு தினமும் ஏராளமான மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கொங்கர்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ஒன்று திரண்டு நேற்று பகல் 11 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகற்ற வேண்டும்
இதுபற்றி அறிந்ததும் கோபி தாசில்தார் குமரேசன், பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த டாஸ்மாக் கடையில் தினமும் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ–மாணவிகள் டாஸ்மாக் கடை உள்ள ரோடு வழியாக அச்சத்தில் செல்ல வேண்டி உள்ளது. பலர் குடித்து விட்டு ரோட்டில் அரை, குறையுடன் ஆடையுடன் விழுந்து கிடக்கிறார்கள். மேலும் குடிபோதையில் பலர் ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி இருக்கின்றனர். எனவே கொங்கர்பாளைத்தில் உள்ள கடையை கண்டிப்பாக அகற்ற வேண்டும்,’ என்று கோரிக்கை விடுத்தனர்.
15 நாட்களுக்குள்...
இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘15 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தினமும் இந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்,’ என்று உறுதி அளித்தனர்.
இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து மதியம் 12 மணி அளவில் தங்களுடைய முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story