அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது சங்க கூட்டத்தில் தீர்மானம்


அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது வீடியோ–போட்டோகிராபர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு,

ஈரோடு மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவுரவ தலைவர் சண்முகம் கலந்துகொண்டு பேசினார்.

இதில், புதுடெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் விரைவில் மேம்பாலம் கட்ட வேண்டும். ஈரோடு மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து சாலை அமைக்க வேண்டும். அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் குடியிருப்பு பகுதியில் திறக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் 2017–2019 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் சங்க செயலாளர் கார்த்தி, பொருளாளர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story