புத்தேரி மேம்பாலம் அருகே சாலையில் ‘திடீர்’ பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு


புத்தேரி மேம்பாலம் அருகே சாலையில் ‘திடீர்’ பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 April 2017 4:15 AM IST (Updated: 17 April 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் புத்தேரி மேம்பாலம் அருகே சாலையில் ‘திடீர்‘ பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் இருந்து புத்தேரி செல்லும் ஆராட்டு சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும். புத்தேரி, இறச்சகுளம், பூதப்பாண்டி ஆகிய ஊர்களுக்கு இந்த சாலை வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள், ஆஸ்பத்திரிகள் மற்றும் பள்ளி ஆகியவை இருக்கின்றது.

ஆராட்டு சாலையில் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு கழிவுநீர் செல்வதற்காக சாலையின் இடையே ஒரு சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் புத்தேரி மேம்பாலத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே இருக்கின்றது.

‘திடீர்‘ பள்ளம்


இந்த நிலையில் நேற்று அந்த பாலத்தின் அருகில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. ‘திடீர்‘ பள்ளத்தால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பள்ளத்தில் யாரும் தவறி விழாமல் இருக்க அதை சுற்றிலும் கற்கள், தென்னை ஓலை உள்ளிட்டவற்றை வைத்தனர்.

பின்னர் இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story