மரத்வாடா மண்டலத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் வெப்பம் 110 பாரன்ஹீட்டை தாண்டி தகிக்கிறது சூரியன்


மரத்வாடா மண்டலத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் வெப்பம்  110 பாரன்ஹீட்டை தாண்டி தகிக்கிறது சூரியன்
x
தினத்தந்தி 17 April 2017 3:47 AM IST (Updated: 17 April 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

மரத்வாடா மண்டலத்தில் 110 பாரன்ஹீட்டை தாண்டி தகிக்கும் வெயிலால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவுரங்காபாத்,

மரத்வாடா மண்டலத்தில் 110 பாரன்ஹீட்டை தாண்டி தகிக்கும் வெயிலால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடரும் சோதனைகள்

மரத்வாடா மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் தொடரும் கால நிலை மாற்றங்களால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. 2 பருவகாலங்களில் மழை பொய்த்துப்போனதால் இந்த மாவட்ட விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர். காலம் தவறிய மழை, ஆலங்கட்டி மழை என தொடர்ந்து சோகத்தை சந்தித்து வந்த 8 மாவட்டங்களிக்கும் கடந்த பருவமழை சற்று நிம்மதியை தந்தது.

ஆனால் அது நீண்ட காலம் நிலைக்கவில்லை. வெயில்காலம் தற்போது தான் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே மக்களை சூரியன் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. கடந்த 4, 5 நாட்களாக 110 பாரன்ஹீட்டை தாண்டும் வெயில், ஒவ்வொரு நாளும் முந்தைய நாளின் தாக்கத்தில் இருந்து அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

மக்கள் முடக்கம்

தொடரும் வெயில் இருந்து தப்பிக்க பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியேறவே மக்கள் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக மக்கள் அதிகம் கூடும் சந்தைகள், பொது இடங்களில் கூட்டம் குறைவாகவே காணமுடிகிறது. சாலைகளும் வெறிச்சோடியே காணப்படுகின்றன. குளிர்பான கடைகள் நிரம்பி வழிகின்றன.

இரவு சூரிய கதிரில் இருந்து மக்கள் தப்பித்தலும் வெப்பக்காற்று தூங்கவிடாமல் வாட்டி வதைக்கிறது. வறட்சியால் வானத்தை பார்த்த மக்கள் தற்போது வெப்பத்தை தனிக்க மேகங்கள் கருணைக்காட்டுமா? என வானத்தை பார்த்து நிற்கின்றனர்.

இந்த நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் மரத்வாடா மண்டலத்தில் மேலும் 3 நாட்களுக்கு இதே வெப்பநிலை தான் தொடரும் தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே மரத்வாடா மண்டலத்தில் 3 பேர் வெப்பத்திற்கு பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story