பயிர் கடன் கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து விவசாயி சாவு மனைவியும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த சோகம்


பயிர் கடன் கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து விவசாயி சாவு மனைவியும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த சோகம்
x
தினத்தந்தி 17 April 2017 4:13 AM IST (Updated: 17 April 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

பயிர் கடன் கிடைக்காத விரக்தியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கணவர் இறந்த சோகத்தில் அவரது மனைவியும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஜல்னாவில் நடந்துள்ளது.

ஜல்னா,

பயிர் கடன் கிடைக்காத விரக்தியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கணவர் இறந்த சோகத்தில் அவரது மனைவியும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஜல்னாவில் நடந்துள்ளது.

தம்பதி


ஜல்னா மாவட்டம் கன்சவாகினி தாலுகா ராம்சகாவ் கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஜி பாபுரோ(வயது 36). விவசாயி. இவரது மனைவி ரத்னமாலா(30).

ராம்ஜி பாபுரோ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இருந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். சில மாதங்கள் கடனுக்கான வட்டியை செலுத்தி வந்த நிலையில் திடீரென அவர் நம்பியிருந்த விவசாயம் கைவிட்டது. கடும் வறட்சி மற்றும் காலம் தவறிய பருவ மழையால் அவர் விளைவித்த பயிர்கள் நாசமாகின.

புதிதாக கடன்

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக பயிர் கடன்பெற வங்கியை அணுகினார். ஆனால் முன்பு வாங்கிய கடனை செலுத்தவில்லை என்பதை காரணம் காட்டி வங்கி அவருக்கு கடன் தர மறுத்துவிட்டது.

இதனால் விரக்தி அடைந்த ராம்ஜி பாபுரோ விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் மனைவி ரத்னமாலா கணவரை பிரிந்த சோகத்தில் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்துபோன தம்பதிக்கு 14 வயதுக்குட்பட்ட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தம்பதிகளின் விபரீத முடிவால் இவர்களின் குழந்தைகள் நிர்கதியாக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story