ஆயுதப்படைப் பிரிவில் உதவி கமாண்டன்ட் தேர்வு
ஆயுதப் படைப்பிரிவில் உதவி கமாண்டன்ட் பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 179 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மத்திய ஆயுதப்படைப் பிரிவு சுருக்கமாக சி.ஏ.பி.எப். என அழைக்கப்படுகிறது. இந்தப் பிரிவின் கீழ் எல்லைக்காவல் படை (பி.எஸ்.எப்.), ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.), தொழிற்சாலை பாதுகாப்பு படை – (சி.ஐ.எஸ்.எப்.), எஸ்.எஸ்.பி. (சசாஸ்திரா சீமா பல்) ஆகிய படைப்பிரிவுகள் இயங்குகின்றன.
தற்போது இந்த படைப்பிரிவுகளில் உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்ப யூ.பி.எஸ்.சி. அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 179 பணியிடங்கள் இந்தத் தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.
உதவி கமாண்டன்ட் –2017 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2–8–1992 மற்றும் 1–8–1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர்கள் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். என்.சி.சி. ‘பி’ அல்லது ‘சி’ சான்றிதழ் பெற்றிருந்தால் சிறப்புத் தகுதியாக கருதப்படும்.
உடல் தகுதி:
விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 165 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். ஆண்கள் மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீ.யும்., 5 செ.மீ. விரியும் திறனும் இருக்க வேண்டும். ஆண்கள், குறைந்தபட்சம் 50 கிலோ எடையும், பெண்கள் 46 கிலோ எடையும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு (பேப்பர்–1, பேப்பர்–2), நேர்காணல், ஆளுமைத்திறன் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கையொப்பம் மற்றும் புகைப்படத்தை தேவையான இடத்தில் குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கடைசி தேதி:
விண்ணப்பிக்க கடைசி நாள் : 5–5–2017–ந் தேதி
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.upsc.gov.in. ,www.upsconline.nic.in போன்ற இணையதள பக்கங்களை பார்க்கலாம்.

Next Story